×

ராயனூர் அருகே பாசன வாய்க்காலில் கழிவு அகற்ற வேண்டும்

கரூர், மே. 9: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் அருகே செல்லும் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு தேங்கியுள்ளது. கரூர் அமராவதி ஆற்றில் செட்டிப்பாளையம் அருகே தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பணை வளாகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதுபோன்ற ஒரு பாசன வாய்க்கால் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியின் வழியாக செல்கிறது. இந்த வாய்க்கால் சரிவர து£ர்வாரப்படாத காரணத்தினால், தற்போது அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு தேங்கியுள்ளது.

இந்த பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட அதிகளவு வாய்ப்புகள் உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, ராயனூர் பாசன வாய்க்காலில் படர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post ராயனூர் அருகே பாசன வாய்க்காலில் கழிவு அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Rayanoor ,Karur ,Karur Corporation ,Chettipalayam ,Karur Amaravati river ,Dinakaran ,
× RELATED கரூர் ரயில்வே நிலைய சாலை பகுதியில்...